தென்காசியில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசி, ஜன. 29:  தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (31ம் தேதி) நடக்கிறது. இதுதொடர்பாக மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நாளை மறுநாள் (31ம் தேதி) காலை 11 மணிக்கு எனது தலைமையில் தென்காசி சுப்பாராஜா திருமண மண்டபத்தில் நடக்கிறது. இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பதில் அளிக்கின்றனர். விவசாயிகள் குறைதீர்ப்பதற்காக நடைபெறும் இந்த கூட்டத்தில் தென்காசி மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

Tags : meeting ,Tenkasi ,
× RELATED கும்பகோணத்தில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்