துப்பட்டா சிக்கியதால் பைக்கில் இருந்து கீழே விழுந்த பெண் சாவு

விழுப்புரம், ஜன. 28:     விழுப்புரம் திருவிக வீதியை சேர்ந்தவர் சன்னியாசி மகள் கல்பனா (23). இவர் கள்ளக்குறிச்சி தாலுகா இந்திலியை சேர்ந்த வன் ரோஸ் (23) என்பவருடன் கடந்த 25ம் தேதி பைக்கில், விழுப்புரத்தில் இருந்து திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2.30 மணி அளவில், ஜெயசூர்யா கல்லூரி அருகே சென்றபோது, கல்பனாவின் துப்பட்டா பைக் சக்கரத்தில் சிக்கியது. இதில் கல்பனா நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் கல்பனாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. உடனே அவரை அங்கிருந்த அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே கல்பனா இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து வன் ரோஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED தம்மம்பட்டியில் பரபரப்பு...