×

தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு விருது

தர்மபுரி, ஜன.28:  தமிழகத்தில் 3வது சிறந்த போலீஸ் ஸ்டேஷனாக டவுன் ஸ்டேஷன் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, குடியரசு தினவிழாவில் முதல்வரிடம் இன்ஸ்பெக்டர் விருது வாங்கினார்.
போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்கு பதிவுகள், குற்றவாளிகளை கண்டுபிடித்தல், கணினி பயன்பாடு, குற்றவாளிகளை கைது செய்தல், குண்டர் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இனங்களின் அடிப்படையில் டவுன் போலீஸ் ஸ்டேஷன் தமிழக அளவில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து, கடந்த 26ம் தேதி சென்னையில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ரத்னகுமாருக்கு விருதை வழங்கினார். இதையடுத்து, நேற்று முன்தினம் உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு நேரில் சென்று பார்வையிட்டு இன்ஸ்பெக்டர் ரத்னகுமாரை பாராட்டினார். நேற்று எஸ்பி ராஜன், ஏடிஎஸ்பி சுஜாதா, டிஎஸ்பி ராஜ்குமார் ஆகியோர் இன்ஸ்பெக்டர் ரத்னகுமார் மற்றும் போலீசாரை பாராட்டினர்.

Tags : Dharmapuri Town Police Station ,
× RELATED தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேசனில்...