×

அங்கன்வாடி முன்பு குவிந்த குப்பையால் சுகாதாரக் கேடு


தேனி. ஜன. 23: தேனியில் அங்கன்வாடி மையம் அருகே குப்பை தேக்கப்படுவதால் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. தேனி நகர் பழைய அரசு மருத்துவமனை ரோட்டில் பொதுப்பணித் துறை அலுவலகம் அருகே ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத் துறையின் கீழ் செயல்படும் அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் இப்பகுதியை சேர்ந்த 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் முன் பருவ கல்வி பயின்று வருகின்றனர். இம்மையம் அருகே நகராட்சி துப்புரவு துறையினர் பல்வேறு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொண்டு வந்து தேக்கி வைத்து பின்னர் அப்புறப்படுத்துகின்றனர். இதனால் அங்கன்வாடி மையத்திற்குள் எப்போதும் துர்நாற்றம் வீசி வருகிறது. கொசுத் தொல்லையும் உள்ளது. முன்பருவக் கல்வி பயிலும் குழந்தைகள் பயிலும் மையம் அருகே குப்பை தேக்கப்படுவதால் குழந்தைகளுக்கு சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் அங்கன்வாடி மையம் அருகே குப்பைகளை தேக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு