×

குமரி அதிமுக நிர்வாகி மீது மனைவி பரபரப்பு புகார் இரும்பு கம்பியால் தாக்கி கையை முறித்தார்

நாகர்கோவில், ஜன.23 : கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருேக உள்ள பாலராமபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவரது மகள் நளினகுமாரி என்ற ஆனி லதா (33). இவர் தற்போது, நாகர்கோவில் வடசேரியில் உள்ள தனது அத்தை வீட்டில் உள்ளார். நேற்று மதியம், நளினகுமாரி தனது தாயாருடன் குமரி மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது : கடந்த 2012ம் ஆண்டு, உடல் நிலை சரியில்லாத நிலையில் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த எனது அத்தைக்கு உதவியாக நான் இருந்து வந்தேன். அப்போது சுசீந்திரம் அக்கரை பகுதியை சேர்ந்த ஷாஜின்காந்தி (38) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் பேசிக்கொண்டு இருந்த போது எனது குடும்ப விபரங்களை கூறினேன். அப்போது ஏற்கனவே எனக்கு 2011 ல் திருமணம் நடந்து, பின்னர் குடும்ப தகராறில் விவாகரத்து பெற்ற விபரத்தையும் தெரிவித்தேன். இதை அனைத்தையும் கேட்ட ஷாஜின்காந்தி, கடந்த கால வாழ்க்கையை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. நானே உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். பின்னர் பெரியவர்கள் முன்னிலையில் பேசி, திருமணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வந்த சமயத்தில் குளங்களில் மீன் பிடி குத்தகை, பார் ஏலம் எடுத்தல், திருவிழா கடைகள் நடத்தல் போன்றவற்றுக்காக என்னிடம் இருந்து பணம் மற்றும் நகைகளை பெற்றார். கடந்த 16.9.2013 அன்று, அக்கரையில் உள்ள தேவாலயத்தில் வைத்து திருமணம்,  நடந்தது. எனது கணவர் ஷாஜின்காந்தி, அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்ததால், இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் அதிமுக முக்கிய பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். எங்கள் திருமணத்தின் போது ₹3 லட்சம் ரொக்கம் மற்றும்  நகைகள், சீர் வரிசை பொருட்கள் வரதட்சணையாக கொடுத்தோம்.

திருமணம் நடந்த அன்று இரவு, எனது கணவரின் மொபைல் போனை பார்த்த போது தேரூரை சேர்ந்த ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை தெரிந்து கொண்டேன். முதல் நாள் என்பதால் நான் அது பற்றி எதுவும் கேட்க வில்லை. 2 வது நாள் நான் கேட்ட போது, எங்களுக்குள் பிரச்சினை வெடித்தது. அது முதல் தொடர்ந்து என்னை பல்வேறு வகைகளில் துன்புறுத்தல் செய்தார். நான் அதை சமாளித்து வாழ்ந்து வந்தேன். பின்னர் ஏற்கனவே பூதப்பாண்டி பகுதியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கருகலைப்பு வரை சென்றதும், பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் மனு இருப்பதும் அறிந்தேன்.  இதையடுத்து எனது கணவர்  என்னிடம் மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து  ெகாள்ள தொடங்கினர். வெளியே கூற முடியாத அளவுக்கு  கொடுமைப்படுத்தினார். கடந்த 2017 ல் என்னை கம்பியால் தாக்கி கையை முறித்தார்.  இந்த நிலையில், எனது கணவர் ஷாஜின்காந்தி, வேறொரு பெண்ணை திருமணம் செய்து ெகாண்டதாக அறிகிறேன். என்னை முறைப்படி விவாகரத்து செய்யாமல் இந்த திருமணம் நடந்துள்ளது. இது சட்டப்படி தவறு ஆகும். எனவே எனது பணம் மற்றும் நகைகளை மீட்டு தருவதுடன், என்னை ஏமாற்றிய ஷாஜின் காந்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் புகார் மனுவில் கூறி உள்ளார். ஷாஜின்காந்தி, குமரி மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை துணை செயலாளராக உள்ளார். மேலும் குமரி மாவட்ட மீனவ கூட்டுறவு இணைய துணைத்தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Kumari ,executive ,AIADMK ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு அணைகள்...