×

அனைத்து பள்ளிகளிலும் ஜன.25ல் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி

நாகர்கோவில், ஜன.22: அனைத்து அரசு பள்ளிகளிலும் ஜனவரி 25ம் தேதி மாணவர்கள் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 25.01.2020 அன்று 10வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்வின் தொடர்ச்சியாக அன்றைய தினம் தேசிய வாக்காளர் தினம் குறித்த உறுதிமொழியை மாணவ மாணவியர் வாசிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை 25.1.2020 அன்று காலை 11 மணியளவில் பள்ளி மாணவ-மாணவர்களைக் கொண்டு எடுத்துக்கொள்ள உரிய நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தர
விடப்பட்டுள்ளது.

அதன்படி ‘ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கையுடைய இந்தியக் குடிமக்களாகிய நாம், நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும், சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்பையும் நிலைநிறுத்துவோம் என்றும், மேலும், ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றியும், மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி, ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்தவொரு தூண்டுதலுமின்றியும் வாக்களிப்போம் என்றும் உறுதி மொழிகிறோம்’ என்ற உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : schools ,
× RELATED மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தீவிரம்