×

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் விவசாயிகள் - தொழிலாளர் கட்சி மாநில பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்

கன்னியாகுமரி, ஜன. 22: கன்னியாகுமரியில் தமிழக விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்திய சங்கம் மற்றும் பொன்குமார் இளைஞரணி ஆகியவற்றின் மாநில பொதுக்குழு அழைப்பு நிகழ்ச்சி 2 நாட்கள் நடந்தது. சங்க மாநிலத் தலைவர் பொன்குமார் தலைமை வகித்து குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். சங்க பொதுசெயலாளர் செல்வம் முன்னிலை வகித்தார். சங்க குமரி மாவட்ட தலைவர் லாரன்ஸ் வரவேற்றார். நிகழ்ச்சியில் தி.மு.க. கோவை வடக்கு மாவட்ட துணை செயலாளர் ராஜேந்திரன், வி.தொ.கட்சி பொதுசெயலாளர் மலர் ஆறுமுகம், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் தாரகை கத்பர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 2-வது நாளான நேற்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழகத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.கவுக்கும் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மத்திய அரசு தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி)-யை நடைமுறைபடுத்தக் கூடாது, தொழிலாளர்கள் சட்டம் மற்றும் மறுசீரமைப்பை மத்திய அரசு கைவிட வேண்டும், நலவாரியங்களை பாதுகாக்க போராட வேண்டும்.கட்டுமானம் மற்றும் மனை தொழிலில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும்.விவாசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். மத்திய அரசு பொருளாதார வீழ்ச்சியை மீட்டெடுக்க வேண்டும். மக்கள் தொகைக்கேற்ப இடஒதுக்கீட்டினை உயர்த்திட சாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இடஒதுக்கீட்டை தனியார் துறைகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags :
× RELATED மழைநீர் வடிகாலில் கழிவை விட்ட...