இந்து கோயில்களில் இரவு முழுவதும் திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் ஆலோசனை கூடடத்தில் தீர்மானம்

பாவூர்சத்திரம், ஜன.20: தென்காசி, நெல்லை மாவட்டம் பகுதி இந்து கோயில்களில் திருவிழாக்களை இரவு முழுவதும் நடத்த அனுமதி கோரி பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோயிலில் வைத்து அனைத்து சமுதாய மக்களின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. நெல்லை தட்சணமாற நாடார் சங்கத் தலைவரும், பாவூர்சத்திரம் தினசரி மார்க்கெட் சங்கத் தலைவருமான ஆர்.கே.காளிதாசன் தலைமை வகித்தார். ஜெயசந்திரன், திருமலைக்குமாரசாமி, கருத்தப்பாண்டி, தமிழ்மணி, நாராயணசிங்கம், பாலசுப்பிரமணியம், கருணாகரன், சண்முகசுந்தரம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தார். சாக்ரடீஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். வென்னிமலை 3ம் தேவர் சமுதாய மண்டகப்படி தலைவர் சரவணன் வரவேற்றார். கீழப்பாவூர் ஒன்றிய முன்னாள் தலைவர் காமராஜ், கே.ஆர்.பால்துரை ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் நெல்லை, தென்காசி மாவட்ட பகுதிகளில் கொடை விழாக்கள், திருவிழாக்கள், ஆலய விழாக்கள், பண்டிகை கால விழாக்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை முன்பு போல் இரவு முழுவதும் நடைபெற வேண்டுமென்றும், எல்லா சமுதாய மக்களின் அடிப்படை உணர்வுக்கும், உரிமைக்கும், உண்மைக்கும் மதிப்பளித்து அரசும், அரசு நிர்வாகமும், நீதித்துறையும் அனுமதியை வழங்க வேண்டுமென்று ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் தெட்சணமாற நாடார் சங்கத்தை சேர்ந்த கணேசன், முன்னாள் சேர்மன் சேம்பர் செல்வராஜ், செல்வி சங்குகிருஷ்ணன், வைத்திலிங்கம், மயிலப்புரம் பிரபாகரன், அன்புராஜ், செல்லப்பா, அருள், அச்சுதன், சாக்ரடீஸ், குட்டி கணேசன், அச்சுதன், காமராஜ், மதன் சுப்பிரமணியன், ஆசிரியர் பால்மணி, விவேக் முருகன், முன்னாள் துணை சேர்மன் சுதன், அட்மா சேர்மன் கணபதி மற்றும் திருமலைக்குமாரசாமி, குமரன் பண்ணையார், பரசுராமர், துரையாதவ், மாரியப்பன், பாலசுப்பிரமணியன், குத்தாலிங்கம், சுரண்டை சுப்பிரமணியன், பண்டாரம், ரவி பட்டாச்சாரி, துரை, சிவன்பாண்டியன், வி.கே.புரம் அருண், அழகிரி நைனா, மாடசாமி, பால்ராஜ், செல்லையா மற்றும் பாவூர்சத்திரம், கீழப்பாவூர், குறும்பலாப்பேரி,  சுரண்டை, புளியங்குடி, ஊத்துமலை, ரெட்டியார்பட்டி, வாசுதேவநல்லூர், பண்பொழி, செங்கோட்டை, குத்துக்கல்வலசை, வீகேபுரம், கடையம், அம்பை, வீகேபுதூர், முத்துகிருஷ்ணப்பேரி, சோலைச்சேரி, சேர்ந்தமரம், கலங்கல், அரியப்புரம், ஆவுடையானூர், செட்டியூர், திருமலாபுரம், கல்லூரணி, புலவனூர், புங்கம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, ஆம்பூர், சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம் உட்பட 222 ஊரை சேர்ந்த இந்து கோயில் நிர்வாகிகள் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.

Tags : temples ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு