எம்ஜிஆர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

கடையநல்லூர், ஜன.20:  கடையநல்லூரில்  எம்ஜிஆரின்  பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், இனிப்புகள் வழங்கியும், கிருஷ்ணாபுரம்அபயஹஸ்த ஆஞ்சநேயர்கோயில், முப்புடாதி அம்மன் கோயில்களில் அன்னதானம் வழங்கியும் கொண்டாடினர். நகர அதிமுக செயலாளர் கிட்டுராஜா, எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகன் தலைமை வகித்தனர். நகர எம்.ஜி.ஆர்.மன்ற துணை செயலாளர் முத்துக்கிருஷ்ணன், மாநகர் மாவட்ட மாணவரணி துணை செயலாளர் கருப்பையாதாஸ், மாவட்ட இளைஞரணி துணைத்தலைவர் ஜெயமாலன், மாவட்ட வர்த்தக அணி பொருளாளர் மைதீன், நகர இளைஞரணி செயலாளர் ராஜேந்திரபிரசாத், மாணவரணி செயலாளர் செங்கலமுடையார், ராசையா மற்றும் வார்டு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கோயில்களில் அன்னதானத்திற்கான ஏற்பாடுகளை எம்.கே.முருகன் செய்திருந்தார்.

வி.கே.புரம்: வி.கே.புரத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.  நிகழ்ச்சிக்கு அதிமுக அமைப்பு செயலாளர் முருகையாபாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து, எம்ஜிஆர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் பேச்சாளர் மீனாட்சிசுந்தரம், சூப்பர் மார்க்கெட் கூட்டுறவு துணை தலைவர் அசோக், சிங்கைஅருண், மகளிர் அணி செயலாளர் இமாகுலேட், முன்னாள் நகர செயலாளர் ராஜதுரை, முன்னாள் கவுன்சிலர் விஜயபாலாஜி மற்றும் மண்சோறுசுப்பையா, பொன்னுச்சாமி, முனியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சங்கரன்கோவில்:   சங்கரன்கோவிலில் நகர அமமுக கட்சி சார்பில் நடந்த எம்ஜிஆரின்  பிறந்த தின விழாவிற்கு நகர செயலாளர் முப்பிடாதி   தலைமை வகித்தார். அவைத்தலைவர் சாமி, பொருளாளர் முத்துபாண்டியன், இலக்கிய அணி ராமசந்திரன், மாணவரணி ஆதி, இளைஞரணி பூசைதுரை, கனகசபாபதி முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட வக்கீல் அணி வைரமுத்து,  மாவட்ட இளைஞர் பாசறை ராமர் பாண்டி,  நகர இளம்பெண்கள் பாசறை செயலாளர் மணித்தாய் முருகராஜ்,  நிர்வாகிகள்  பாலசுப்பிரமணியன்,  ஜோதிராஜ், மகளிணி சேர்ந்த விக்டோரியா,  கூடம்மாள், சுப்புலட்சுமி, தமிழ்செல்வி, மற்றும் சரவணகுமார்   உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரின் வார்டு பகுதிகளில்  கொடியேற்றப்பட்டது.

கடையம்:  கடையம் அருகே தெற்கு மடத்தூரில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு புறநகர் மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பின்னர் அதிமுக கொடியேற்றி இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட அவைத்தலைவர் வீரபாண்டியன், இளைஞர் பாசறை மாவட்ட செயலாளர் சேர்மபாண்டி, மாவட்ட மாணவரணி செயலாளர் முருகேசன், கடையம் ஒன்றிய செயலாளர் அருவேல்ராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் புளி கணேசன், மகாலிங்கம், லட்சுமணன், பனை வெல்ல கூட்டுறவு சங்க தலைவர் வடிவேல் முருகன், ராமதுரை, மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சங்கரன்கோவில்:  சங்கரன்கோவிலில் மாவட்ட எம்ஜிஆர் மன்றம், நகர அதிமுக சார்பில்  எம்ஜிஆர் பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.  நெல்லை கூட்டுறவு பேரங்காடி துணை தலைவர் வேலுச்சாமி, நகர செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
பஸ் நிலையம் அருகே அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.  விழாவில் நகர அவைதலைவர் கந்தவேல், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கருப்பசாமி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஆனந்த், நாகரத்தினம், முத்துகுட்டி, சரவணன், நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் சின்னராஜ், மாநில பேச்சாளர்கள் கணபதி, லட்சுமணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நகரின் பல இடங்களில் கொடியேற்றப்பட்டது.

Tags : MGR Birthday Celebration ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு