மின் கம்பத்தில் பைக் மோதி டெய்லர் பலி

பெரம்பலூர் ஜன 19: பெரம்பலூர் அருகே சொந்த ஊருக்கு பொங்கல் பண்டிகையை கொண்டாட வந்த டெய்லர் பைக்கில் சென்றபோது மின்கம்பத்தில் மோதி காயமடைந்து இறந்தார். பெரம்பலூர் அருகே உள்ள சமத்துவபுரம் மகாத்மா காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் ரமேஷ் (23). இவர் கோயம்புத்தூரில் டெய்லர் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்தார். நேற்று முன்தினம் பெரம்பலூர் அன்னைநகரில் உள்ள அவரது உறவினர்கள் வீட்டில் இருந்து பைக்கில் ஆலம்பாடி சாலையில் பெரம்பலூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக அவரை பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் திருச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். இதுகுறித்து செல்வராஜ் கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் இன்ஸ்பெக்டர் நித்யா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Tags : Taylor ,
× RELATED சில்லி பாயின்ட்...