கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை செங்கம் தாலுகாவில்

செங்கம், ஜன.19: செங்கம் தாலுகாவில் கிராம உதவியாளர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். செங்கம் தாலுகாவில் செங்கம், மேல்பள்ளிபட்டு, பாச்சல், இறையூர், புதுப்பாளையம் என 5 பிர்காக்கள் உள்ளது. இதில் செங்கம் பிர்காவில் குப்பநத்தம், குயிலம், வளையாம்பட்டு. பாச்சல் பிர்காவில் உச்சிமலைகுப்பம், இறையூர் பிர்காவில் நத்தவாடி, சி.கெங்கம்பட்டு, மேல்பள்ளிபட்டு பிர்காவில் மேல்புழுதியூர் உள்ளிட்ட பகுதிகளில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது.

மேலும், நீப்பத்துறை, கல்லரைபாடி கிராமத்தில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் என மொத்தம் 9 பணியிடங்கள் காலியாக உள்ளது. இதனால் அரசு துறைகளை சார்ந்த பணிகள், சான்றுகள் பெறுவதில் பொதுமக்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. எனவே, காலியாக உள்ள கிராம உதவியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Grama Niladhari ,Chengam Taluk ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் மக்கள் கோரிக்கை...