இலஞ்சியில் பயனாளிகளுக்கு ரூ.10 லட்சம் கோழி குஞ்சுகள் வழங்கல்

தென்காசி, ஜன.14: தென்காசியை அடுத்த இலஞ்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிலான அசில் இன நாட்டுக்கோழி குஞ்சுகள் வழங்கும் விழா நடந்தது.விழாவிற்கு செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். திருநெல்வேலி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் இலஞ்சி சண்முகசுந்தரம், நிலவள வங்கி தலைவர் சங்கரபாண்டியன், வீட்டு வசதி சங்க தலைவர் மயில்வேலன், ஊத்துமலை கூட்டுறவு சங்க தலைவர் பாண்டியன், இலஞ்சி கூட்டுறவு சங்க தலைவர் குமாரவேல் முன்னிலை வகித்தனர். கால்நடை மருத்துவர் சசிகுமார் வரவேற்றார்.விழாவில் இலஞ்சி, குற்றாலம், காசிமேஜர்புரம், மத்தளம்பாறை பகுதிகளை சேர்ந்த பயனாளிகளுக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள் வீதம் 556 பயனாளிகளுக்கு 10 லட்சத்து 42 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்பிலான கோழிகுஞ்சுகளை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.வழங்கினார். விழாவில் கூட்டுறவு சங்க இயக்குனர்கள் காத்தவராயன், மூக்கையா, அன்னமராஜா, செல்வக்குமார், கணேஷ் தாமோதரன், மற்றும் சௌந்தரபாண்டியன், கிருஷ்ணன், சுப்பிரமணியன், மாடசாமி, மாரிராஜ், வெளியப்பன், மாரியப்பன், பிரபு, குணம், குணசீலன், வெள்ளகால் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags :
× RELATED வில்லிப்பாக்கம் கிராமத்தில் அவலம் மின் இணைப்பு இல்லாத அங்கன்வாடி மையம்