மாவட்ட ஊராட்சி தலைவராக வசந்தி மான்ராஜ் தேர்வு

விருதுநகர், ஜன. 12:  விருதுநகர் மாவட்ட ஊராட்சியில் 20 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக 13 இடங்களையும், திமுக 7 இடங்களையும் கைப்பற்றியது. நேற்று தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மாவட்ட கலெக்டரும், தேர்தல் அலுவலருமான கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது. காலை நடைபெற்ற தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தலில் அதிமுக சார்பில் வசந்தி மான்ராஜ், திமுக சார்பில் முத்துச்செல்வி போட்டியிட்டனர். இதில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வசந்தி மான்ராஜ் 13 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

Related Stories: