மேச்சேரியில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி

மேச்சேரி, ஜன.9: மேச்சேரி வட்டாரத்தில், வேளாண்மை தொழில்நுட்ப வேளாண்மை முகமையின் கீழ் பால்பண்ணைகளில் அறிவியல் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா மற்றும் ஓமலூர் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குநர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு, கறவை மாடு வளர்ப்பில் கன்று முதல் கறவை மாடு வரை கையாள கூடிய தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். பால்பண்ணையில் கொட்டகை அமைத்தல், கறவைமாடு தேர்வு செய்யும் முறை, தீவனத்தின் வகைகள், உற்பத்தி தொழில்நுட்பம், மானாவரிக்கு ஏற்ற தீவன பயிர்கள், தாது உப்பு பயன்பாடு, அசோலா உற்பத்தி தொழிற்நுட்பம், கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் உள்ளிட்ட தொழில் நுட்பங்கள் குறித்து செயல்விளக்கமளித்தனர். இதில் கால்நடை மருத்துவர்கள் மாரியப்பன், பன்னீர்செல்வம், வட்டார தொழில்நுட்ப மேலாளர் செலவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

Related Stories: