நத்தம்காலனி அருகே சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள் அகற்றம்

தர்மபுரி, ஜன.9:  தர்மபுரி- திருப்பத்தூர் சாலையில் உள்ள நத்தம்காலனி முதல் நத்தம்காலனிபுதூர் வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் தார்சாலை செல்கிறது. இச்சாலையின் இருபுறமும் முள்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்திருந்தது. இந்நிலையில் ஊர்பொதுமக்களும், காமராஜர் கல்வி அறக்கட்டளையும் இணைந்து, சாலையின் இருபுறமும் உள்ள முட்செடிகளை அகற்ற முடிவு செய்தனர். அதன்படி, நேற்று பொக்லைன் மூலம் முட்செடிகளை அகற்றும்பணி நடந்தது. முட்செடிகளை அகற்றப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமம் இல்லாமல் எளிதாக சென்று வருகின்றனர். இதுகுறித்து காமராஜர் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தலைவர் கந்தசாமி கூறுகையில், ‘கடந்த இரண்டு ஆண்டுகளாக, முட்செடிகள் சாலையின் இருபுறமும் ஆக்கிரமித்திருந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். எனவே, ஊர்பொதுமக்கள் ஒத்துழைப்புடன் முட்செடிகள் அகற்றப்பட்டது,’ என்றார்.

Related Stories: