சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு சிறந்த நிறுவனத்திற்கான விருது

சேலம், டிச.27:  சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரிக்கு ஏஐசிடிஇ-சிஐஐ-யின் தொழில் நிறுவனங்களோடு இணைந்து சிறப்பாக செயலாற்றும் தொழிற்கல்வி நிலையங்களுக்கான தேசிய அளவிலான Best Industry-Linked Technical Institutes Award-2019 கிடைத்துள்ளது. இதுகுறித்து கல்லூரியின் தலைவர் வள்ளியப்பா கூறுகையில், இவ்விருதிற்கு இந்தியாவில் உள்ள 9832 கல்லூரிகள் போட்டியிட்டன. இந்த ஆண்டு ஏஐசிடிஇ-சிஐஐ சர்வேயின் டிஜிடல் இன்ஸ்டிடியூட்ஸில் 10 விருதுகள் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குவழங்கப்பட்டன. இந்த விருதுகளில் சேலம் சோனா தொழில்நுட்பக்  கல்லூரிக்கு அகில இந்திய அளவில் சிறந்த கனிணி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆடை வடிவமைப்பு துறைக்கான விருதுகள் வழங்கப்பட்டது.

சோனா கல்லூரிஇவ்விருதினைப் தொடர்ந்து 6வது முறையாக பெறுவது பெருமைக்குரியதாகும். இந்த விருதினை கல்லூரியின் தலைவர் திரு.வள்ளியப்பா, துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா,  தியாகு வள்ளியப்பா, கல்லூரியின் முதல்வர் செந்தில்குமார் மற்றும் துறைத்தலைவர்கள் ஆகியோர் முறையே பெற்றுக்கொண்டனர். இந்த விழாவில் ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் அனில் டி சாகஸ்ரபுது, உயர் கல்வியின் சிஐஐ தேசியக் குழுவின் தலைவர் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த கல்லூரி பிரதிநிதிகள், தொழில்துறைச் சேர்ந்த பிரதிநிதிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர் என்றார். அப்போது கல்லூரியின் முதல்வர்கள் செந்தில்குமார், கலைக்கல்லூரி முதல்வர் காதர் நவாஷ் மற்றும் துறைத்தலைவர்கள் சத்தியபாமா, ராஜா ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: