காஞ்சி வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றம்

காஞ்சிபுரம், டிச.25: காஞ்சிபுரம் வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி சார்பில் பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் கலகலப்பான பட்டிமன்றம் நடந்தது. வேலம்மாள் கல்விக்குழுமத்தின் அங்கமான வேலம்மாள் போதி கேம்பஸ் பள்ளி காஞ்சிபுரத்தில் எதிர்வரும் கல்வி ஆண்டில் தொடங்கப்படுகிறது. அதன் தொடக்க விழா கொண்டாட்டங்களிள் ஒன்றாக காஞ்சிபுரம் காரைப்பேட்டையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் பட்டிமன்றம் நடந்தது. வேலம்மாள் கல்விக் குழும இயக்குநர் சசிக்குமார் சிறப்பு பேச்சாளர்களை வரவேற்று பேசினார்.

பொன்னேரி, வேலம்மாள் பள்ளி முதல்வர் சாந்தி தலைமை தாங்கி வேலம்மாள் பள்ளிகளின் கல்விச் சாதனைப் பட்டியல்களை விவரித்தார்.

இதை தொடர்ந்து பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா தலைமையில் பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர், புலவர் ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்ட பிள்ளைகளின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் துணை நிற்பது கல்விச்சூழலே! வீட்டுச்சூழலே! என்னும் தலைப்பில் கலகலப்பான பட்டிமன்றம் நடைபெற்றது.

Related Stories: