மது ஒழிப்பு போராட்டத்தில் உயிரிழந்த சசிபெருமாள் புகாரளித்ததாக ஆன்லைனில் சிஎஸ்ஆர் பதிவு

இளம்பிள்ளை, டிச.13:  மகுடஞ்சாவடி  போலீஸ் ஸ்டேசனில் மது ஒழிப்பு போராட்டத்தின்போது உயிரிழந்த சசிபெருமாள் கடந்த  அக்டோபர் மாதம் புகார் கொடுத்துள்ளதாக சிஎஸ்ஆர் ஆன்லைன் பதிவில் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை கிராமம் இ.மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சசிபெருமாள்(59). காந்தியவாதியான இவர, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலை பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி நடந்த போராட்டத்தில் உயிரிழந்தார். இந்நிலையில், கடந்த அக்டோபர் 1ம் தேதி மகுடஞ்சாவடி போலீசில் சசிபெருமாள் புகார் கொடுத்துள்ளதாகவும், போலீஸ் ஸ்டேசனில் தற்போது பணியில் இல்லாத போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி விசாரணை நடத்தி வருவதாக ஆன்லைனில் சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த தகவல் சசிபெருமாள் குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertising
Advertising

இதுகுறித்து சசிபெருமாளின் மூத்த மகன் விவேக் கூறுகையில், சிஎஸ்ஆர் ஆன்லைன் பதிவில் இறந்தவரின் பெயரை சம்மந்தம் இல்லாமல், குறிப்பிட்டு இருப்பது போலீசாரின் அலட்சிய போக்கை காட்டுகிறது என்றார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சசிபெருமாளின் மகன் விவேக் கொடுத்த புகார் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதில், புகார்தாரர் பெயரில் சசிபெருமாளின் பெயரும் தவறுதலாக இடம்பெற்றுள்ளது. அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

Related Stories: