மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டுமான பணிக்கு பூமி பூஜை

தர்மபுரி, டிச.12: தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், ₹13.96கோடி மதிப்பில் வழக்கறிஞர் சங்க கட்டிடம் உள்ளிட்ட புதிய கட்டுமான பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சுற்றுச்சுவர், பாதை வசதி, பார்க்கிங் வசதி, நீதிமன்ற அறைகளுக்கு ஏசி வசதி, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் வசதி மற்றும் வழக்கறிஞர்கள் சங்க கட்டிடம் ஆகியவற்றிற்கான ₹13.96 கோடி மதிப்பில், கட்டுமான பணிக்கான பூமி பூஜை நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு மூத்த வழக்கறிஞர் அப்புனு கவுண்டர் தலைமை வகித்தார். கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். பூஜையில் வழக்கறிஞர் சங்க தலைவர் பாலு, செயலாளர், முன்னாள் தலைவர் ராஜாங்கம், செல்வராஜ், முனுசாமி, அசோக்குமார், பசுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Earth Pooja ,
× RELATED அயோத்தியில் 3 மாதத்தில் ராமர்கோயில்...