×

தண்ணீர் தொட்டி பூமி பூஜை

ஒட்டன்சத்திரம், பிப். 3: ஒட்டன்சத்திரம் அருகே கரியாம்பட்டியில் எம்எல்ஏ மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.8.50 லட்சம் செலவில் 60 ஆயிரம் கொள்ளளவு மேல்நிலை தொட்டி அமைக்க பூமிபூஜை நடந்தது. அர.சக்கரபாணி எம்எல்ஏ கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். முன்னதாக வேலூர்- அன்னப்பட்டி, புங்கமுத்தூர், வாகரை, வேலம்பட்டி, அப்பிபாளையம் பகுதிகளில் நடந்த திமுக ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, தெருவிளக்கு, கழிப்பறை வசதி, முதியோர் உதவித்தொகை சம்பந்தமாக பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் ராஜாமணி, ஊராட்சி செயலாளர்கள் மயில்சாமி, தங்கராஜ்,ஒன்றிய செயலாளர் தங்கராஜ், நிர்வாகிகள் கருப்புசாமி, சின்னராஜ், சின்னச்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Earth Pooja ,
× RELATED மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டுமான பணிக்கு பூமி பூஜை