×

கலாசார திறன் போட்டி முக்கூடல் பள்ளி மாணவர்கள் சாதனை

பாப்பாக்குடி. டிச.11:   முக்       கூடல் ருக்மணி மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் கலாசார திறன் போட்டியில் வெற்றி பெற்று பரிசுகளை பெற்றனர். சுவாமி விவேகானந்தா யோகா, ஸ்கேட்டிங் அசோசியேட்ஸ் நடத்திய கலாசார திறன் போட்டி-2019 கடையத்தில் நடந்தது. இதில் ஏராளமான பள்ளியில் இருந்து மாணவ மாணவியர் பங்கேற்றனர். அதில் முக்கூடலை சேர்ந்த ருக்மணி மெட்ரிகுலேசன் பள்ளி சேர்ந்த மாணவ மாணவியர் சாதனை படைத்தனர். சிலம்பம் பிரிவில் சுடலைமணி, சரவணன், ராஜபிரியா, ஸ்டெபிடோனா ஸ்டெல்லா முதலிடத்தையும், அருண்சுந்தர், ஆகாஷ் 2வது இடத்தையும், பரதநாட்டியம் பிரிவில் பிரைஸ்லின் முதலிடத்தையும், ரெயோனா, ஆனி ஜோனா, இன்பஅரசி 2வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளிக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.  வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளியின் தாளாளர் தமிழ்ராஜ், முதல்வர் திரேஸ்மேரி வெர்ஜின், துணை முதல்வர் ரதிகிறிஸ்டி, சிலம்ப பயிற்சியாளர் ஜெயசக்திவேல், பரத பயிற்சியாளர் சினேகா, உடற்கல்வி ஆசிரியர் தங்கதுரை, ஆசிரியர்கள், மாணவர்கள்  பாராட்டினர்.

Tags :
× RELATED மாயமான மூதாட்டி சடலமாக மீட்பு