×

பத்ரகாளியம்மன் கோயிலுக்கு 19 லட்சம் மதிப்பில் வைரத்தோடு காணிக்கை

மேச்சேரி, டிச.11:மேச்சேரியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் அமாவாசை, பவுர்ணமி மற்றும் வெள்ளி, சனி கிழமைகளில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களின் வேண்டுதல் நிறைவேறும் பட்சத்தில் பணம், நகையாக காணிக்கை செலுத்துவது வழக்கம். இந்நிலையில், ஓமலூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் குழுவினர் ஏற்கனவே, வைர மூக்குத்தி வழங்கிய நிலையில், மேலும் 19 லட்சம் மதிப்பிலான வைரத்தோடுகளை பத்ரகாளியம்மன் கோயில் அதிகாரிகளிடம் நேற்று நன்கொடையாக வழங்கினர்.

Tags : Bhadrakaliamman ,
× RELATED 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோயிலை புனரமைக்க வலியுறுத்தல்