×

கடத்தூர் அருகே பழுதான நிழற்கூடத்தை சீரமைக்க வலியுறுத்தல்

கடத்தூர், டிச.11:கடத்தூர் அருகே பழுதடைந்த நிலையில் இருக்கும் நிழற்கூடத்தை சீரமைக்க ேவண்டும் என பயணிகள் ேகாரிக்கை விடுத்துள்ளனர். கடத்தூர் அடுத்த போசிநாயக்கனஹள்ளியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக, தர்மபுரி -சேலம் பிரதான சாலையில்,பயணியர் நிழற்கூடம் கட்டப்பட்டது. இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், நிறழ்கூடத்தின் ஜன்னல்கள், தரைதளம், இருக்கைகள் அனைத்தும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் மழை, வெளியில் காலங்களில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இந்த நிழற்கூடத்தை அப்பகுதியை சேர்ந்த சிலர், மது அருந்தும் பாராக பயன்படுத்தி வருகின்றனர். எனவே, பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு, பழுதடைந்த நிழற்கூடத்தை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kadathur ,
× RELATED ரூ.147 கோடியில் தடப்பள்ளி வாய்க்கால் சீரமைப்பு