×

கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு

கடத்தூர், செப்.24: கடத்தூர் பேரூராட்சியில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. கடத்தூர் பஸ் நிலையத்தில் சென்னையை சேர்ந்த கலைக்குழுவினர் மூலம், டெங்கு தடுப்பு குறித்து விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. பேரூராட்சி தலைவர் கேஸ் மணி முன்னிலை வகித்தார். கலைக்குழுவினர் ஆடல் பாடல்கள் வாயிலாக, டெங்கு காய்ச்சல் உருவாகும் விதம், அதனை தடுக்க ேமற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தனர். பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவ்வப்போது கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக உணவு உண்பதற்கு முன்பு, கைகளை நன்றாக கழுவ வேண்டும்.
வகுப்பறை மற்றும் கழிவறைகளை சுற்றி தண்ணீர் தேங்கி இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். குடிநீர் மற்றும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். இதன் வாயிலாக கொசுக்களின் பெருக்கத்தை தடுக்க முடியும். குறிப்பாக டெங்கு கொசுக்கள் உருவாகாத சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

The post கலை நிகழ்ச்சிகள் மூலம் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kadhatur ,Chennai ,Kadathur Bus Station ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...