×

கலசபாக்கம் பகுதிகளில் சாகுபடி செய்த 50 ஏக்கர் சாம்பார் வெங்காயத்தில் வேர்ப்புழு தாக்குதல் விவசாயிகள் வேதனை

கலசபாக்கம், டிச.11: கலசபாக்கம் பகுதிகளில் 50 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சாம்பார் வெங்காயத்தில் வேர்ப்புழுக்களின் தாக்கம் காணப்படுகிறது. தமிழகத்திற்கு தேவையான வெங்காயம் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வந்து கொண்டிருந்தது. தற்போது அந்த மாநிலங்களில் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளதால் வரலாறு காணாத அளவுக்கு வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில், கலசபாக்கம் அடுத்த கடலாடி, கீழ்பாலூர் உள்ளிட்ட கிராமங்களில் பெரும்பாலான விவசாயிகள் சாம்பார் வெங்காயம் சாகுபடி செய்துவருகின்றனர். இதில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சாம்பார் வெங்காயம் வேர்ப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாமல் விவசாயிகள் கண்கலங்கி வருகின்றனர். மேலும், சாம்பார் வெங்காய உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால் தற்போது கிலோ ₹200க்கு விற்கப்படும் வெங்காயம், மேலும் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது. எனவே, வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, நோய் தாக்குதலில் இருந்து விடுபட விவசாயிகளுக்கு உரிய ஆலோசனைகள் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...