விபத்தில் பள்ளி மாணவி படுகாயம் திருவெண்ணெய்

நல்லூர்: திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் முத்துலிங்கம் மகள் தோபிகா (12). இவர் மணக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறார். தினந்தோறும் கடலூர்-சித்தூர் சாலை வழியாக சகதோழிகளுடன் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற தோபிகா மாலையில் பள்ளி முடிந்ததும் வீடு திரும்பியுள்ளார். அப்போது அந்த வழியாக பைக் ஓட்டி சென்ற ஒருவர் தோபிகா மீது எதிர்பாராதவிதமாக மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த தோபிகாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தோபிகாவின் உறவினர் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : School student ,accident ,
× RELATED மர்ம நபருக்கு வலைவீச்சு மாநில அளவில்...