தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழி அமைச்சர் அறிவிப்புக்கு பாராட்டு

ஓசூர், டிச.10: உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இந்தியை விருப்பப் பாடமாக கற்பிக்கும் முயற்சி கை விடப்படும். அதற்கு பதிலாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தெலுங்கு மொழி கற்பிக்கப்படும். இதற்காக  ₹3 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இதற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோருக்கு, தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி பேசும் மக்கள் சார்பில் ஜஎன்டியூசி தேசிய செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான மனோகரன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

Related Stories: