×

குளச்சல் கடலில் நின்ற ரிக் இழுவை கப்பல்

குளச்சல், டிச.10: குளச்சல் அருகே குறும்பனை பகுதியில் நேற்றுமுன் தினம் மாலை ரிக் இயந்திரம் இழுவை கப்பல் ஒன்று நின்றுகொண்டிருந்தது. நேற்று காலை அது குளச்சல் துறைமுக பாலம் அருகில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்தில் நின்றது. இதை பார்த்து மக்கள் பரபரப்படைந்தனர். குளச்சல் பகுதியில் ரிக் இயந்திரம் நிற்கும் தகவல் அந்த பகுதியில் பரவியது. ஏராளமான மக்கள் அங்கு திரள ஆரம்பித்தனர்.

தகவல் அறிந்த மரைன் போலீசார் இது குறித்து விசாரித்தனர். இதில், உடன்குடியில் அனல் மின் உற்பத்தி நிலையத்துக்கான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக கோவாவில் இருந்து கொண்டு வரப்படும் ரிக் இயந்திரம் இங்கு நிற்பதாகவும், மாலையில் சென்றுவிடும் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மக்கள் நிம்மதியடைந்தனர்.

Tags : Rick ,pool ,
× RELATED தை அமாவாசையை முன்னிட்டு கமலாலய குளத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்