சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவி ெதாகை

சென்னை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பில் சிறுபான்மை மாணவர்களின் உயர்கல்விக்காக உதவித்தொகை ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி, புரசைவாக்கத்தில் உள்ள பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைமை அலுவலகத்தில் நடந்தது.

Advertising
Advertising

நிகழ்ச்சிக்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது நாஸிம் தலைமை தாங்கினார். தலைமை நிலைய செயலாளர் ரசாக் முன்னிலை வகித்தார். தென் சென்னை மாவட்ட சமூக மேம்பாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் ஜெய்னுலாப்தீன் வரவேற்றார்.

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில தலைவர் எம்.முஹம்மது இஸ்மாயில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மருத்துவ துறையில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 2 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கினார்.

Related Stories: