×

சேலத்தில் வாகன தணிக்கையில் சிக்கியது டூவீலர் பதிவெண்ணில் ஓடிய 2 ஆட்டோக்கள்

சேலம், டிச.9: சேலத்தில் போக்குவரத்து போலீசார் நடத்திய வாகன தணிக்கையின் போது, டூவீலர் பதிவெண்களில் இயக்கப்பட்ட 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடி விட்ட டிரைவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் மாநகர பகுதியில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக, போலீஸ் கமிஷனர் செந்தில்குமாருக்கு புகார் வந்தது. இதையடுத்து, மாநகர துணை போலீஸ் கமிஷனர் செந்தில் மேற்பார்வையில் போக்குவரத்து உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி மற்றும் போக்குவரத்து போலீசார் அவ்வப்போது வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம், அழகாபுரம் பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த 2 ஆட்டோக்களை நிறுத்தினர். போலீசாரைக்கண்டதும் ஆட்டோக்களை நிறுத்தி விட்டு டிரைவர்கள்  தப்பியோடி விட்டனர்.  இதையடுத்து 2 ஆட்டோக்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில், அந்த ஆட்டோக்கள் டூவீலர்களுக்கான பதிவெண்களில் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த ஆட்டோக்கள் டவுன் குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. அவை யாருடைய ஆட்டோக்கள் என்றும், தப்பியோடிய டிரைவர்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags :
× RELATED குளோபல் உலக சாதனைக்காக 50 நிமிடங்களில் 50 ஆசனங்கள் அசத்திய பள்ளி மாணவன்