×

தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை

உளுந்தூர்பேட்டை,  டிச. 9: உளுந்தூர்பேட்டை அருகே எ.மழவராயனூர் கிராமத்தை சேர்ந்தவர்  இளையராஜா(36). இவர் சம்பவத்தன்று தனது வீட்டில் இருந்த  தாய், தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு அவர்களை தாக்கி உள்ளார். இதன் பிறகு  வீட்டை விட்டு சென்றவர் காணவில்லை. உறவினர் பல இடங்களில் தேடி பார்த்து  வந்த நிலையில் திருப்பெயர் கிராமத்தில் உள்ள அவர்களுக்கு சொந்தமான  நிலத்தில் தூக்கு போட்ட நிலையில் இறந்து கிடந்தார். இந்த சம்பவம் குறித்து  எடைக்கல் காவல்நிலையத்தில் இளையராஜாவின் தம்பி தென்னரசு(31) கொடுத்த  புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் கிள்ளிவளவன் வழக்கு பதிந்து விசாரணை  செய்து வருகிறார்.


Tags :
× RELATED கன்னியாகுமரியில் வாலிபர் தற்கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும்