×

விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவி கொலை கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம், டிச. 9: விழுப்புரத்தில் ஆசிரியர் மனைவியை எரித்து கொன்ற வழக்கில் கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம்  சுதாகர் நகர் கரிகாலன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன் (60). திருக்கோவிலூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக  பணியாற்றி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.  இவருக்கு திருக்கோவிலூரை சேர்ந்த லீலா என்பவரை  நடராஜன் 2வதாக திருமணம் செய்து கொண்டார். இவருக்கு வேலாயுதம் (23) என்ற  மகன் உள்ளான். அவர் சென்னையில் தங்கி ஐடி கம்பெனியில் வேலை செய்து  வருகிறார். இந்நிலையில் இந்திரா (56) விழுப்புரம் சுதாகர் நகர் பகுதியில்  காய்கறி கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் அவர் வட்டிக்கும் பணம் கொடுத்து  வந்தார். நேற்று முன்தினம் காலை நடராஜன் தனது 2வது மனைவியை பார்ப்பதற்காக  விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு சென்றுள்ளார். பிற்பகல்  நடராஜன், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்போது இந்திரா  உடல் எரிந்த நிலையில் கரிக்கட்டையாக பிணமாக கிடந்தார். இதை பார்த்து  அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து உடனடியாக விழுப்புரம் தாலுகா  போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். டிஎஸ்பி சங்கர், இன்ஸ்பெக்டர் கனகேசன்,  எஸ்ஐக்கள் பிரகாஷ், சதீஷ், சத்தியசீலன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு  விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இந்திராவின் பின்பக்க  தலையில் ரத்தக்காயம் இருந்தது தெரியவந்த்து. இதன் அடிப்படையில் அவரை யாரோ  மர்ம நபர்கள் இரும்புக்கம்பியால் தாக்கிவிட்டு அடையாளம் தெரியாமல்  இருப்பதற்காக வீட்டில் இருந்த துணிமணிகளை அவர் மீது போட்டு எரித்துக்கொலை  செய்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்கள்  வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த வீட்டில் பதிந்திருந்த தடயங்களை  சேகரித்தனர். மேலும் போலீஸ் மோப்ப நாய் தமிழ் வரவழைக்கப்பட்டும் சோதனை  செய்யப்பட்டது. மோப்ப நாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அதே  தெருவிலேயே சுற்றி சுற்றி வந்தது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.  பின்னர் கொலை செய்யப்பட்ட இந்திராவின் உடலை போலீசார் பிரேத  பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.வட்டிக்கு  பணம் கொடுக்கும் தகராறில் யாரேனும் இந்திராவை அடித்துக்கொலை செய்துவிட்டு  உடலை எரித்தார்களா? அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமாக இந்த கொலை  நடந்திருக்கலாமா? என்பது குறித்து போலீசார் விசாரணைை துவங்கினர். இதனிடையே  விழுப்புரம் எஸ்பி (ெபாறுப்பு) ஜெயச்சந்திரன் ெகாலைநடந்த வீட்டில் ஆய்வு செய்து  விசாரணை நடத்தினார். குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.  

இன்ஸ்பெக்டர் கனகேசன் உள்ளிட்ட 4 பேர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு  குற்றவாளிகளை தேடிவருகின்றனர். மேலும் நடராஜனுக்கும், அவரது மனைவிக்கும்  அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இதனால் சந்தேகத்தின் பேரில் அவரிடமும் போலீசார்  ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.‘விரைவில் குற்றவாளிகள் கைது’இதுகுறித்து தாலுகா காவல்நிலைய இன்ஸ்பெக்டர் கணகேசனிடம் கேட்டபோது,  வட்டிக்கு பணம் விடும் தொழிலில் பிரச்சனையா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில்  விசாரணை நடத்தி வருகிறோம். அவரது கணவர் தான் என்பதை தற்போது கூறமுடியாது.  எல்லாம் ஆரம்ப கட்டவிசாரணையில் உள்ளது. இரும்புராடால் தாக்கியதில்  இந்திராவின் மண்டைஓடு உடைந்துள்ளது. குற்றவாளிகளை நெருங்கி விட்டோம்.  விரைவில் பிடிபடுவார்கள் என்றார்.

Tags : murder ,
× RELATED இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி