×

திருமலை அரசு பள்ளி மாணவர்கள் ஏரி, குளக்கரையில் மரக்கன்று நட்டனர்

போளூர், டிச.9: போளூர் அடுத்த திருமலை அரசு பள்ளி மாணவர்கள் கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளக்கரையில் புளிய மரக்கன்றுகளை நட்டனர்.போளூர் அடுத்த திருமலை அரசு தொடக்கப் பள்ளியில் புளிய மரக்கன்றுகளை நட்டனர். தொடர்ந்து, பள்ளி மாணவர்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, புளிய மரங்கள் பயன்கள் குறித்து பதாகைகள் ஏந்தி கிராமம் முழுவதும் ஊர்வலம் வந்தனர். பின்னர், கிராமத்தில் உள்ள ஏரி மற்றும் குளக்கரைகளில் கிராம மேலாண்மைக்குழு தலைவர் எம்.சத்யா தலைமையில், தலைமையாசிரியர் கா.அமீர்ராஜ் முன்னிலையில், பள்ளி மாணவர்கள் புளிய மரக்கன்றுகளை நட்டனர்.முடிவில் உதவி ஆசிரியர் சு.சண்முகம் நன்றி கூறினார்.போளூர் அடுத்த திருமலை அரசு பள்ளி மாணவர்கள் சார்பில் கிராம ஏரிக்கரையில் புளிய மரக்கன்றுகள் நட்டனர்.

Tags : Thirumalai Government School ,Lake ,
× RELATED தொடர் மழை, காற்றால் வாழை மரங்கள் சாய்ந்தன