×

கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகளால் விபத்து அபாயம்

கடத்தூர், நவ.5: தர்மபுரி -அரூர் பிரதான சாலையில் கடத்தூர் பகுதியில் சாலையோரம் கட்டி வைக்கப்படும் கால்நடைகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கடத்தூர் அருகே புதுப்பட்டி அண்ணா நகர் கிராம மக்கள் அதிகமாக கால்நடைகளை வளர்த்து வருகின்றனர். இந்த கால்நடைகளை மேய்சலுக்காக, தர்மபுரி- அரூர் பிரதான சாலையோரங்களில் கட்டிச்செல்கின்றனர். இதனால் சாலையோரங்களில் வரும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பலர் விபத்தில் சிக்கி காயமடைந்தும் வருகின்றனர். எனவே சாலையோரங்களில் கால்நடைகளை கட்டுவதை தடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.Tags : Road accident ,Kadathur ,
× RELATED மாதவரம் பால்பண்ணை அருகே சாலை விபத்தில் சிறுவன் உயிரிழப்பு