×

வெள்ளப்பெருக்கு குறைந்தது குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி

தென்காசி, டிச. 5: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழை காரணமாக அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் மெயினருவியில் நேற்று முன்தினம் இரவு குளிக்க தடை விதிக்கப்பட்டது. வெள்ளப்பெருக்கு பெருமளவு குறையாத காரணத்தால் மூன்றாவது நாளாக நேற்று காலையிலும் குளிக்க தடை நீடித்தது. பின்னர் மதியத்திற்கு பிறகு மெயினருவியில் வெள்ளம் குறையத் துவங்கியதையடுத்து ஓரமாக நின்று குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவியில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். கடந்த 2 நாட்களுக்குப் பிறகு அனைத்து அருவிகளிலும் குளிக்க அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Tags : Flooding ,waterfalls ,Courtallam ,
× RELATED குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் 2 வது நாளாக குளிக்க தடை