திருவிக நகர் மண்டலத்தில் 937 நாய்களுக்கு தடுப்பூசி

பெரம்பூர்: சென்னையில் உள்ள பல்லாயிரக்கணக்கான தெருநாய்கள்  வெறி நாய்களாக மாறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் உள்ளதாகவும், மேலும் பல இடங்களில் தெரு நாய்கள் பொதுமக்களை கடித்து பொதுமக்கள் பாதிப்புள்ளாகும் சூழ்நிலையும் உருவானது. எனவே அவற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடவும் மாநகராட்சி சார்பில் அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது.அதன் ஒரு பகுதியாக நேற்று காலை திரு.வி.க நகர் மண்டல அலுவலர் நாராயணன் தலைமையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இதில் மண்டல நல அலுவலர் ஆஷா லதா, கால்நடை உதவி மருத்துவர் தேவி, துப்புரவு அலுவலர்கள் பால்ராஜ்.  தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இவர்கள் தலைமையில் 50 பணியாளர்கள் 6வது மண்டலத்திற்கு உட்பட்ட புளியந்தோப்பு, ஓட்டேரி, கொளத்தூர், திருவிக நகர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள சுமார் 3500 தெரு நாய்களுக்கு   தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி மருந்து கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில்  முதற்கட்டமாக நேற்று மட்டும் 937 நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: