×

பிளாஸ்டிக் ெபாருட்களுக்கு ஜனவரி 1 முதல் தடை கேரள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு


திருவனந்தபுரம், நவ. 22: கேரளாவில் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராய் விஜயன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், வரும் ஜனவரி 1ம் தேதி முதல் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டது. அனைத்து பிளாஸ்டிக் கேரி பேக்குகள், மேஜையில் விரிக்கும் பிளாஸ்டிக் சீட், கூலிங் பிலிம், தெர்மா கோல் மற்றும் ஸ்டெரோபாம் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அலங்கார பொருட்கள், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கப்புகள், பிளேட்டுகள், ஸ்பூண்கள், போர்க், ஸ்டிரா உட்பட அனைத்து வகை பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்களுக்கு எதிராக சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986 படி கடும் நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பவர்கள், மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு விற்பனையாளர்களுக்கு ₹10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவதும் குற்றம் செய்தால் ₹25 ஆயிரமும், மூன்றாவதும் குற்றம் செய்தால் ₹50 ஆயிரம் அபராதத்துடன் நிறுவனத்தை மூடவும் உள்ளாட்சித்துறை செயலாளர்களுக்கும் மாசு கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Tags : Kerala Cabinet ,meeting ,
× RELATED புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி...