×

போலீஸ் சேனல் பகுதிக்கு தலைமை நிருபர் திரு சுரேஷ் அவர்களின் பார்வைக்குஅந்த மேட்டரில் அடிக்கடி சிக்கும் குமரி போலீஸ்

குமரி மாவட்டத்தில் காவல் நிலையங்களுக்கு புகார் அளிக்க வரக்கூடிய பெண்களிடம் நைசாக பேசி தொடர்பு ஏற்படுத்தி அவர்களை தனிமையில் சந்திக்கும் அளவுக்கு சில போலீஸ் அதிகாரிகள் நெருக்கத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள் . இதுவே அவர்களுக்கு சிக்கலாகியும் விடுகிறது. இதுக்கு முன் இன்ஸ்பெக்டர் ஒருவர் காவல்நிலையத்தில் இருந்தபடியே பெண் ஒருவரிடம் ஆபாசமாக நடந்து கொண்ட காட்சி வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை உண்டாக்கியது . இந்த காட்சி வெளியானதின் பி்ன்னணியில் தனிப்படை போலீஸ்காரர் ஒருவர் இருந்தது தெரிய வந்தது. சம்பந்தப்பட்ட பெண் யாருக்கு என்ற போட்டியில் இந்த வாட்ஸ் அப் ஆபாசம் வெளியானது .

இப்போது எஸ்.ஐ . ஒருத்தர் அந்த மேட்டருக்காக எல்லை தாண்டி அருகில் உள்ள கேரளாவுக்கு போய் எக்குத்தப்பா சிக்கினாராம். அவரை ரகசியமா சுற்றி வளைத்த சிலர் அங்குள்ள போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர் . நிலைமை இரு மாநில காக்கிகளுக்கும் அவமானம் ஆகி விடும் என்பதால் ரகசியமாக முடிச்சுகிட்டாங்க. இதை மோப்பம் பிடிச்ச எஸ்.ஐ.யின் எதிரிகள் சிலர் அவர் நான்கு லட்சம் கொடுத்து தப்பியதாக வாட்ஸ் அப்பில் கிளப்பி விட்டார்கள் . ₹4 லட்சம் கொடுக்ககூடிய அளவுக்கு என்ன மேட்டர் என்று குமரி மாவட்ட காவல் துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது . விஷயம் எஸ்.பி. காதுக்கு போய் விசாரணை நடக்கிறதாம்.

Tags : Suresh ,police channel area ,Kumari ,
× RELATED நாகர்கோவில் திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜனுக்கு கொரோனா