×

திருப்பத்தூர், ராணிப்ேபட்டை புதிய மாவட்டம் 28ம் தேதி தொடக்கம் விழா மேடைக்காக பந்தக்கால் நடும் பணி

ஜோலார்பேட்டை, நவ.22: திருப்பத்தூர், ராணிப்பேட்டை புதிய மாவட்ட தொடக்க விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. விழா மேடைக்கான பந்தக்கால் நடும் பணியை அமைச்சர் வீரமணி தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்டம் நிர்வாக வசதிக்காக திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை என மூன்று மாவட்டங்களாக கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்டங்கள் பிரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். இதையடுத்து கலெக்டர் அலுவலகம், எஸ்பி அலுவலகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வரும் 28ம் தேதி திருப்பத்தூரில் நடைபெறும் புதிய மாவட்ட ெதாடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், துறை அதிகாரிகளும் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்த புதிய மாவட்ட தொடக்க விழா ஜோலார்பேட்டை அருகே உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது. அதற்காக அங்கு மேடை அமைக்கப்பட்டு, 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் வசதிகள் ெசய்யப்பட்டு வருகிறது.  இந்நிலையில், மேடை அமைக்கும் பணியையொட்டி நேற்று பந்தக்கால் நடும் விழா நடந்தது. திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் சிவனருள் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி பந்தக்கால் நட்டு மேடை பணியை துவக்கி வைத்தார். அப்போது வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், திருப்பத்தூர் சப்-கலெக்டர் வந்தனாகர்க், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

இதுகுறித்து திருப்பத்தூர் கலெக்டர் சிவனருள் கூறுகையில், `வரும் 28ம் தேதி காலை 10.30 மணியளவில் நடைபெறும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் புதிய மாவட்டத்தை துவக்கி வைக்கிறார். பின்னர், இந்த மாவட்டத்தில் உள்ள 1,560 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்ட அளவிலான அலுவலகங்கள் புதிய மாவட்டம் தொடக்க விழா அன்று முதல் செயல்பட துவங்கும். திருப்பத்தூர் பிடிஓ அலுவலகத்தில் தற்காலிகமாக கலெக்டர் அலுவலகம் செயல்படும். மேலும் மாவட்ட அளவிலான அலுவலகங்கள் நிரந்தரமாக அமைக்க இடம் தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்’ என்றார். ராணிப்பேட்டை: அதேபோல், ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலைய வளாகத்தில் வரும் 28ம் தேதி நடைபெறும் ராணிப்பேட்ைட மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் பங்கேற்று புதிய மாவட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இந்நிலையில், விழா மேடை அமைப்பதற்காக நேற்று காலை பந்தக்கால் நடப்பட்டது. இதில், அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கி பந்தக்காலை நட்டார். இதில், கலெக்டர்கள் சண்முகசுந்தரம்(வேலூர்), திவ்யதர்ஷினி (ராணிப்பேட்டை), எஸ்பி மயில்வாகனன், டிஆர்ஓ பார்த்தீபன், சப்-கலெக்டர் இளம்பகவத் உட்பட பலர் கலந்து கொண்டனர். கேப்சன். ராணிப்பேட்டை கால்நடை நோய் தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலைய வளாகத்தில் புதிய மாவட்டம் துவக்க விழா மேடை அமைக்கும் பணிக்காக பந்தக்கால் நடும் நிகழ்ச்சி அமைச்சர் கே.சி.வீரமணி தலைமையில் நேற்று நடந்தது. உடன் கலெக்டர்கள் சண்முகசுந்தரம், திவ்யதர்ஷினி, எம்எல்ஏ சு.ரவி.


திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழா நடைபெற உள்ள ஜோலார்பேட்டை தனியார் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மேடை அமைக்கும் பணியை அமைச்சர் கே.சி.வீரமணி நேற்று தொடங்கி வைத்தார். உடன் கலெக்டர்கள் சண்முகசுந்தரம், சிவனருள், சப்-கலெக்டர் வந்தனாகர்க்.
2ம் கட்ட உடற்தாங்கும் திறன் தேர்வு தொடங்கியது

Tags : Pandakkal ,planting ceremony ,district ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...