×

2.24 கோடியில் 1,044 பேருக்கு நலத்திட்ட உதவி அமைச்சர் வழங்கினார்

சேத்துப்பட்டு, நவ.22: சேத்துப்பட்டில் நடந்த விழாவில் ₹2.24 கோடி மதிப்பில் 1,044 பேருக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார். சேத்துப்பட்டு- செஞ்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று, முதல்வர் சிறப்பு குறைவு தீர்வு திட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், டிஆர்ஓ ரத்தினசாமி, செய்யாறு ஆர்டிஓ விமலா முன்னிலை வகித்தனர். தாசில்தார் சுதாகர் வரவேற்றார்.

விழாவில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், 1,044 பயனாளிகளுக்கு ₹2.24 கோடி மதிப்பில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், சலவைப் பெட்டி, தையல் இயந்திரம், மாற்றுத்திறனாளிக்கான உதவி உபகரணங்கள், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். முடிவில் சமூக பாதுகாப்பு தாசில்தார் ஹரிதாஸ் நன்றி கூறினார். (தி.மலை) சேதமடைந்த மேற்கூரையின் கீழ் அமர்ந்து படிக்கும் மாணவிகள்

Tags : Minister of Welfare ,
× RELATED விவசாயிகள், மக்களுக்கு உதவி செய்ய தயார் நிலையில் இருக்க வேண்டும்