×

கோர்ட்டில் சரணடைந்த 4 பேரை காவலில் விசாாிக்க போலீஸ் முடிவு

புதுச்சேரி, நவ. 22: புதுச்சேரி ரவுடி கொலை வழக்கில் சென்னை ஐகோர்ட்டில் சரணடைந்த 4  பேரை காவலில் எடுத்து விசாரிக்க வடலூர் போலீசார் முடிவு செய்துள்ளனர்.
  புதுச்சேரி, லாஸ்பேட்டையை  சேர்ந்தவர் முரளி. ரவுடியான இவர் கடந்த 2017ல்  படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் மடுவுபேட் சுந்தர், தட்டாஞ்சாவடி  செந்தில், அமரன் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும்  சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.  பின்னர் காலாப்பட்டு சிறையில் இருந்து வெளியே வந்த அமரன் சில மணி நேரத்தில்  வடலூர் அருகே மர்ம கும்பலால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது  தந்தை பாண்டியனும் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக கொலை வழக்கு பதிந்த  வடலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் முரளி கொலைக்கு  பழிவாங்கும் வகையில் அமரன் தீர்த்துக் கட்டப்பட்டது தெரியவந்தது.  

இதையடுத்து பாண்டியனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார்,  தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடினர். இதற்கிடையே இக்கொலையில் வடலூரில்  பதுங்கியிருந்த லாஸ்பேட்டை மூர்த்தி (36), பார்த்திபன் (30), மிதுன்குமார்  (27), வெற்றி (22), தேவராஜ் (24), மோகன்ராஜ் (22) ஆகியோரை போலீசார் நேற்று  முன்தினம் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, பைக்குகள் ஆகியவை  பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய விசாரணையில், முரளி-  சுந்தர் தரப்பு இடையே நடந்த பஞ்சாயத்தின்போது யாரும் ஆயுதம் எடுத்து  வரக்கூடாது என கூறப்பட்டிருந்தது. அமரன் கத்தியை மறைத்து  வைத்திருந்து முதல் நபராக முரளியை தாக்கிய நிலையில் அவரை பழிதீர்க்க பலமுறை  இக்கும்பல் முயன்றதும், அப்போதெல்லாம் தப்பிவிட்டார். விடுதலை ஆனதும்  அமரனை தீர்த்துக்கட்டும் வகையில் அவரை பின்தொடர்ந்து படுகொலை செய்ததாக  வாக்குமூலம் அளித்தனர்.  இதையடுத்து 6 பேரையும் கடலூர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்திய போலீசார் அனைவரையும் சிறையில் அடைத்தனர். இக்கொலை தொடர்பாக மேலும் சிலரை வடலூர் போலீசார் தேடிய நிலையில், சத்யா, கிருஷ்ணகுமார், கார்த்திகேயன்,  விக்னேஷ் உள்ளிட்ட 4 பேர் சென்னை ஐகோர்ட்டில் நேற்று முன்தினம்  சரணடைந்தனர். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களை, வடலூர்  போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கான உயர்  அதிகாரிகளின் ஆலோசனை பெற்று ஓரிரு நாளில் கடலூர் நீதிமன்றத்தில் முறையிட  திட்டமிட்டுள்ளனர். காவல் விசாரணையின்போது மேலும் பல தகவல்கள் வெளியாகும்  என தெரிகிறது.



Tags : court ,
× RELATED கரூர் அருகே அரவக்குறிச்சி...