×

தனியார் மதுபான ஆலை தொழிலாளர்கள் போராட்டம்

விழுப்புரம்,  நவ, 22: விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் தனியார் மதுபான ஆலை இயங்கி  வருகிறது. இந்த ஆலையில் 60 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 10  ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் இவர்கள், தங்களை பணி நிரந்தரம்  செய்யக்கோரி பலமுறை ஆலை நிர்வாகத்தினரிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். இருப்பினும் இவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. இந்நிலையில் தங்களை  பணி நிரந்தரம் செய்யக்கோரியும், உற்பத்தி தொகையை முழுவதுமாக வழங்க  வேண்டும், ஊழியர்கள் அனைவருக்கும் ஏற்றத்தாழ்வின்றி தரமான முறையில் ஒரே  மாதிரியான சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை  வலியுறுத்தி கடந்த சில நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்  ஈடுபட்டனர். இருப்பினும் இவர்களிடம் ஆலை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை  நடத்தவில்லை.இதனால் நேற்றும் இவர்கள் பணிக்கு செல்லாமல் வேலை  நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் ஆலையின் முன்புறம்  நின்றுகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  தொழிலாளர்கள் சங்க கவுரவ தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். தலைவர்  புஷ்பநாதன், செயலாளர் குமரேசன், பொருளாளர் கலைச்செல்வக்குமார் உள்பட  பலர் கலந்து கொண்டனர்.

Tags : liquor mill workers ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை