×

ஆயுதபடை போலீஸ் குடியிருப்பை ஆக்கிரமித்துள்ள சட்டம்-ஒழுங்கு போலீசார்

திருவெண்ணெய்நல்லூர்,
நவ. 20: விழுப்புரம்  மாவட்டத்தில் தற்போது விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம், செஞ்சி,  திருவெண்ணெய்நல்லூர் என சட்டம்-ஒழுங்கு காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் மற்றும் மதுவிலக்கு பிரிவு காவல் நிலையம் என 35 காவல் நிலையங்கள்  உள்ளது. அனைத்து காவல் நிலையத்திலும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர்  மற்றும் காவலர்களுக்கு என குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.  அதில் விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட அதிகாரியிடம் மனு கொடுத்து  குடியிருப்பில் வசித்து வருகின்றனர். ஆயுதப்படை போலீசாருக்கு என தனியாக  வழங்கப்பட்டுள்ள குடியிருப்பு அவர்கள் மட்டும் பயன்படுத்திக்கொள்ள  கட்டப்பட்டுள்ளது.

ஆயுதப்படையிலிருந்து பணி உயர்வு பெற்று  இடமாற்றம் செய்யப்பட்டால் சம்மந்தப்பட்ட உட்கோட்டத்தில் உள்ள  குடியிருப்புக்கு தங்களின் வசிப்பிடத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது  விதிமுறையாக உள்ளது. தற்போது விழுப்புரம் ஆயுதப்படையிலிருந்து  இடமாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் குடியிருப்புகளை காலி செய்து கொடுக்க கோரி  மாவட்ட அதிகாரி உத்தரவிட்டும், சட்டம்-ஒழுங்கு காவலர்கள் சிலர் தங்களின்  தனி செல்வாக்கை பயன்படுத்திக் கொண்டு ஆயுதப்படை குடியிருப்பை ஆக்கிரமித்து  காலி செய்யாமல் இருந்து வருகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டுள்ள  ஆயுதப்படை போலீசார் சிலர் குடியிருப்பு இல்லாமல் தனி நபர்களிடம் அதிக வாடகை  கொடுத்து குடியிருந்து வருகின்றனர். எனவே சட்டம்-ஒழுங்கு போலீசார்  ஆக்கிரமிப்பு செய்துள்ள குடியிருப்பை திரும்ப பெற்று ஆயுதப்படை  போலீசாருக்கு வழங்க மாவட்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை  எழுந்துள்ளது.

Tags : apartment ,
× RELATED புளிய மரத்தில் கார் மோதல்; மேட்டூர் அனல் மின்நிலைய பெண் அதிகாரி, மகன் பலி