×

ஏற்காட்டில் தேமுதிக ஆலோசனை கூட்டம்

ஏற்காடு, நவ.20: ஏற்காட்டில் தேமுதிக சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் பஞ்சநாதன் தலைமை வகித்தார். சேலம் கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் இளங்கோவன் கலந்துக்கொண்டு பேசினார். கூட்டத்தில், தேமுதிக போட்டியிடுவதற்கு சாதகமான இடங்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு, போட்டியிடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், மாயவன், ரமேஷ், தினேஷ், சசி சுரேஷ், முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : First Consultation Meeting ,Yercaud ,
× RELATED ஏற்காடு மான் பூங்கா, முட்டல் நீர் வீழ்ச்சியில் குவியும் சுற்றுலா பயணிகள்