×

கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம்

கடத்தூர், நவ.20: கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம் நடந்தது. கடத்தூர் அருகே அஸ்தகிரியூரில் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் நெற்பயிரில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முகாம் நடந்தது. முகாமில் மொரப்பூர் வேளாண் அலுவலர் வேல்முருகன் தலைமை வகித்தார். இயற்கை விவசாயி பெருமாள் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பாரம்பரிய நெல் ரகம் பயிரிடுவது, நிலத்தில் களைக்கொல்லி பயன்பாடு குறைப்பது குறித்து விரிவாக எடுத்துக் கூறினர். ஓசூர் அதியமான் வேளாண் கல்லூரி பயிற்சி மாணவர்கள், உயிரி உரம் பயன்படுத்துதல் முக்கியத்துவம் பற்றியும், நெற்பயிரில் உயிரி உரங்கள் பற்றி செயல்முறை விளக்கம் விரிவாக
செய்து காட்டி விவசாயிகளுக்கு விழிப்புணர்வு செய்தனர்.  


Tags : Crop Management Camp ,Astrakiriyur ,Kadathur ,
× RELATED கடத்தூர் பகுதியில் மின்னல் வேகத்தில்...