×

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட காங். விருப்ப மனுக்கள் நாளை முதல் விநியோகம்

சுரண்டை, நவ. 20: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரசார், நாளை முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என நெல்லை மேற்கு மாவட்ட காங். தலைவர் பழனிநாடார் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்புவோர் நாளை(21ம் தேதி) முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் ரூ.5 ஆயிரம், வார்டு உறுப்பினர் ரூ.2 ஆயிரம், பேரூராட்சி தலைவர் ரூ.3 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் ஆயிரம் ரூபாய், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் ரூ.3 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ரூ.2 ஆயிரம் என கட்டணம் செலுத்தி விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம்.

சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மற்றும் வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் வாசுதேவநல்லூரில் உள்ள வணிக வைசிய திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணி முதல் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். ஆலங்குளம் ஒன்றியத்திற்குட்பட்டவர்கள் 22ம் தேதி, சுரண்டையில் உள்ள மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக் கொள்ளலாம். தென்காசி மற்றும் கடையநல்லூர் சட்டமன்றத்திற்குட்பட்ட உறுப்பினர்கள்  23ம் தேதி அன்று தென்காசி மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.Tags : elections ,
× RELATED காங். தலைவர் பதவிக்கு டிஜிட்டல் முறையில் தேர்தல்