×

உள்ளாட்சி தேர்தலில் மனு தாக்கல் செய்ய திமுகவினர் ஆர்வம்

செஞ்சி, நவ. 19:  தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கி வருகின்றனர். இதில் செஞ்சி ஒன்றியத்தில் வேட்பு மனுவை திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் எம்.எல்.ஏ.விடம் வழங்கி வருகின்றனர். இதில் செஞ்சி ஒன்றிய செயலாளர் விஜயகுமார், விருப்ப மனுவை வழங்கினார். இதே போன்று மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட பலர் ஆர்வமுடன் விருப்ப மனுவை கொடுத்து வருகின்றனர். செஞ்சி பகுதியில் ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு திமுகவினர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.

Tags : DMK ,elections ,government ,
× RELATED தேவராயநேரியில் திமுக கொடி ஏற்றி...