×

திருக்கோவிலூர் அருகே இளம்பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

திருக்கோவிலூர், நவ. 19: திருக்கோவிலூர் அருகே பொய்குணம் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை மகன் தமிழ்ச்செல்வன் (26). இவருக்கும், சந்தியா என்பவருக்கும் கடந்த 5 வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. தமிழ்ச்செல்வன் அடிக்கடி சந்தியாவை அவரது தாய் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வரச் சொல்லி திட்டியும் தாக்கியும் கொடுமைப்படுத்தியுள்ளார். இதை
யடுத்து சந்தியா அவரது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். தமிழ்ச்செல்வன் கோயம்புத்தூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறு ஒரு பெண்ணுடன் தமிழ்ச்செல்வன் குடும்பம் நடத்துவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து தனது கணவர் வீட்டுக்கு சென்ற சந்தியா, தமிழ்ச்செல்வனை தட்டிக் கேட்டுள்ளார். அப்போது, தமிழ்ச்செல்வன், அவரது தந்தை முனியப்பிள்ளை, தாய் தங்கமணி, சகோதரர் தினேஷ் ஆகிய 4 பேரும் சேர்ந்து சந்தியாவை தாக்கி வீட்டை விட்டு துரத்தியுள்ளனர். இதுகுறித்து சந்தியா திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார், அவர்கள் 4 பேர் மீதும் வழக்குப்பதிந்து தமிழ்ச்செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags : Tirukovilur ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு;...