தொன்போஸ்கோ பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை

கிருஷ்ணகிரி, நவ.19:  கிருஷ்ணகிரி தொன்போஸ்கோ பள்ளி மாணவ,மாணவிகள் மாவட்ட அளவிலான தடகள போட்டியில் சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடைபெற்ற தடகள போட்டியில், பல்வேறு பள்ளிகளை சார்ந்த மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் மாணவி தேன்மொழி, சாருமதி ஆகியோர் தடகளப்போட்டியில் தனிநபர் சாம்பியன் பட்டம் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்து உள்ளனர். மேலும், மாவட்ட அளவில் நடந்த கேரம், பூப்பந்து போட்டியில் முதலிடமும், 2ம் இடமும் பெற்றுள்ளனர். இவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். தகுதி பெற்ற மாணவ, மாணவிகளையும், வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உடற்கல்வி ஆசிரியர்களையும், தர்மபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ்பயஸ் மற்றும் தாளாளர் சூசைராஜ், பள்ளி முதல்வர் எட்வர்ட் ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: