×

தேசிய கபடி போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்கள் டெல்லி புறப்பட்டனர்

மன்னார்குடி, நவ.14: டெல்லியில் நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட பள்ளி சிறுவர்களுக்கான 65வது தேசிய ஆண்கள் கபடி போட்டியில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்க வுள்ள வீரர்களுக்கு வடுவூரில் நடைபெற்று வந்த பயிற்சி முகாம் நிறைவடை ந்ததையொட்டி தமிழக வீரர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்திய பள்ளி விளையாட்டு குழுமம் நடத்தும் 65வது அகில இந்திய அளவிலான 19 வயதிற்குட்பட்ட ஆண்கள் கபடி போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் டெல்லியில் நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 30க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இருந்து அணிகள் பங்கேற்கின்றன. இப்போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்பதற்கு தேர்வாகியுள்ள அணிக்கு பயிற்சி முகாம் கடந்த 10 நாட்களாக வடுவூர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வந்தது. தமிழக அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு வடுவூர் மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் சேகர் பயிற்சியளித்தார்.

இந்நிலையில் பயிற்சி முகாம் நிறைவு மற்றும் வீரர்களுக்கு சீறுடை வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கல்வி அலுவலர் சங்கு முத்தையா தலைமை வகித்தார்.
மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஜெயசந்திரன், திருவாரூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் ராஜ ராஜேந்திரன், தலைமையாசிரியர் கோவிந்தராஜ், மாவட்ட துணை ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்களுக்கு சீறுடைகள் மற்றும் உபகரணங்கள் வழங்கி வாழ்த்தி பேசினர்.தமிழக அணிக்கு பயிற்சியாளராக சேகர், அணி மேலாளராக அறிவழகன், துணை மேலாளராக நாராயண மூர்த்தி, அணியின் கேப்டனாக அஜய் ஆகியோர் தேர்ந்தேடுக்கப்பட்டனர். முன்னதாக உடற்கல்வி இயக்குனர் பாலன் வரவேற்றார். முடிவில் உதவி தலைமையாசிரியர் மதிவண்ணன் நன்றி கூறினார். தமிழக அணி நேற்றிரவு தஞ்சாவூரிலிருந்து சென்னை வழியாக டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.

Tags : team ,National Kabaddi ,Delhi ,
× RELATED தோனி உள்ளிட்ட வீரர்களை உருவாக்கிய ராஞ்சி கிரிக்கெட் பிதாமகன் மரணம்